பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட யோகா போட்டி

Added : நவ 28, 2019
Advertisement

திருப்புத்துார் : திருப்புத்துாரில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவில் யோகா போட்டி நடந்தது.மனவளக்கலை மன்ற அறிவுத்திருக்கோயிலில் நடந்த போட்டியில் சிவகங்கை, திருப்புத்துார், தேவகோட்டை கல்வி மாவட்ட அளவில் வெற்றி பெற்ற, 18 மாணவர்கள் மாவட்ட போட்டியில் பங்கேற்றனர். முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் பரமதயாளன், அறக்கட்டளை தலைவர் சுகுமார் முன்னிலை வகித்தனர். உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரன் வரவேற்றார். நிர்வாகிகள் சுப்பையா, சுப்பிரமணியன் பங்கேற்றனர். இதில் மாவட்ட அளவில் தி.புதுப்பட்டி அரசு உயர்நிலை பள்ளி மாணவர் சரண், வெற்றியூர் அரசு பள்ளி மாணவி கவுதமி ஆகியோர் முதலிடம் பிடித்தனர். இவர்களுக்கு தலா ரூ.1,500 ரொக்க பரிசு வழங்கினர். இருவரும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X