பொது செய்தி

தமிழ்நாடு

நுழைவு கட்டணம் இல்லை

Added : நவ 28, 2019
Advertisement
 நுழைவு கட்டணம் இல்லை

ஆவடி:நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, பசுமை பூங்காவிற்கு, நுழைவு கட்டணம் விதிக்கப்படாது என, ஆவடி மாநகராட்சி அறிவித்துள்ளது.

ஆவடி பசுமை பூங்காவில், நுழைவு கட்டணம், வாகன நிறுத்தக் கட்டணம், பூங்காவில் உள்ள மூன்று கடைகள், சிற்றுண்டி உணவகம் ஆகியவற்றுக்கு, விலை நிர்ணயம் செய்து, ஒப்பந்தப்புள்ளி கோரும் நடவடிக்கையில், ஆவடி மாநகராட்சி ஈடுபட்டு வந்தது.நுழைவு கட்டணம், வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிக்கும் மாநகராட்சியின் முடிவுக்கு, நலச்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து, நம் நாளிதழில், 'வணிக மயமாகும் பசுமை பூங்கா' என்ற தலைப்பில், 25ம் தேதி செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, 'பசுமை பூங்காவிற்கு நுழைவு கட்டணம் விதிக்கப்படாது' என, ஆவடி மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கூறியதாவது:பசுமை பூங்காவில், நுழைவு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற மக்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படுகிறது.இதுதொடர்பாக, ஒப்பந்தப்புள்ளி கோரும் மாநகராட்சியின் முடிவு கைவிடப்படுகிறது. இது தவிர மற்ற ஒப்பந்தங்கள், ஏற்கனவே அறிவித்தபடி நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X