பொது செய்தி

தமிழ்நாடு

கடலுக்கு வீணாக செல்லும் வெள்ள நீர்

Added : நவ 28, 2019
Advertisement

திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே பொக்கனரேந்தல் ஓடையில் கடந்த அக்., முதல் வீணாக வெள்ளநீர் கடலுக்கு செல்கிறது. புதிய தடுப்பணை அமைத்து மழை நீரை சேமிக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு திருப்புல்லாணி சுற்றுவட்டாரப்பகுதியில்பலத்த மழை பெய்துள்ளதால், நிரம்பாத ஓடைகளும், ஊரணியும்கொள்ளளவை தாண்டியுள்ளது. பொக்கனரேந்தல் ஊரணியில்கடந்த 2017ல் துார்வாரப்பட்ட பிறகு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில்4 அடியில் உயரம் குறைவான தடுப்பணை அமைக்கப்பட்டது.24 மணிநேரமும் ஊரணியில் இருந்து வெள்ளநீர் மறுகால் பாய்ந்து வருகிறது.பொக்கனரேந்தலை சேர்ந்த சமூக ஆர்வலர் பசீர் அலி கூறியதாவது: தாதனேந்தல் ஊராட்சிக்குட்பட்ட பொக்கனரேந்தல் ஓடையில் வரும் நீர் ஊரணியில் சேகரமாகிறது.முறையாக துார்வாரி ஆழப்படுத்தாமல், குறைந்தளவு ஆழத்தில் உள்ளது.கடலுக்கு செல்லும் இடத்தில் கூடுதல் தடுப்பணைகளை ஏற்படுத்தினால் அதிகளவு தண்ணீரை சேமிக்கலாம். கோடையிலும் நீர் தட்டுப்பாடு இருக்காது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X