மதகடிப்பட்டில் விபத்து அபாயம்மதகடிப்பட்டு வாரச்சந்தை நடக்கும் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக கடை வைப்பதாலும், வாகனங்களை நிறுத்துவதாலும் விபத்துக்கள் அடிக்கடி நடக்கிறது.கஜேந்திரன், முட்ராம்பட்டு.பாதாள சாக்கடை பணி முடியுமா?முத்திரையர்பாளையம் நெல்லுமண்டி வீதியில் பாதாள சாக்கடை பணி முடியாததாலும், வடிகால் வாய்க்கால் உடைந்துள்ளதாலும், பள்ளி குழந்தைகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.ரவி, முத்திரையர்பாளையம்.தெருவிளக்கு எரியவில்லைமுதலியார்பேட்டை, இந்திரா நகர் காந்தி வீதியில் தெருவிளக்குகள் இரண்டு மாதங்களாக எரியவில்லை.தமிழரசன், இந்திரா நகர்.மூலக்குளம் சந்திப்பில் உள்ள ைஹமாஸ் விளக்கு எரியாமல் இருண்டு கிடப்பதால் விபத்துக்கள் அதிகம் நடக்கிறது.ராஜேந்திரன், மூலக்குளம். கழிவு நீர் தேங்குவதால் அவதிவில்லியனுார் சேந்தநத்தம் கிராமத்தில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல், காலி மனைகளில் தேங்கி துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி மக்களுக்குநோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.ராஜேந்திரன், சேந்தநத்தம்.