வடமங்கலம் பள்ளியில் மாணவர்கள் புரிதல் நிகழ்ச்சி | Dinamalar

இந்தியா

வடமங்கலம் பள்ளியில் மாணவர்கள் புரிதல் நிகழ்ச்சி

Added : நவ 28, 2019

வில்லியனுார்: செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 30 மாணவர்கள் மற்றும் வடமங்கலம் பகவான் ராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 30 மாணவர்கள் ஆகியோர் இணைந்து 'மாணவர்கள் புரிதல்' நிகழ்ச்சிபகவான் ராமகிருஷ்ணா பள்ளியில் நடந்தது.நிகழ்ச்சிக்கு பகவான் ராமகிருஷ்ணா பள்ளி தாளாளர் சிவசுப்ரமணியன் தலைமை தாங்கினார். செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வாசு முன்னிலை வகித்தார். இரு பள்ளி மாணவர்களுக்கிடையே கல்வி பயிற்றுதல் பரிமாற்றம், பல்வேறு விளையாட்டு போட்டிகள், பேச்சு, பாட்டு, நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.மேலும் கீழுரில் உள்ள புதுச்சேரி இணைப்பு நினைவு மண்டபம், சிவராந்தகம் பழமை வாய்ந்த ஆலமரம் ஆகிய இடங்களுக்கு கலைப்பயணம் மேற்கொண்டு பார்வையிட்டனர்.இதனை செல்லிப்பட்டு அரசு பள்ளி ஆசிரியர்கள் வெங்கடேஸ்வரன், சாந்தகுமார், தீப்பாய்ந்தான் மற்றும் பகவான் ராமகிருஷ்ணா பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர்இணைந்துஇருபள்ளி மாணவர்களையும் வழி நடத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X