குழந்தைகளை கண்ணின் இமையெனக் காப்போம்

Added : நவ 28, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
மனிதர்கள் நம்மால் படைக்கப்பட்ட அதிசயங்களை விட நம்மை ஒவ்வொரு நாளும் அதிசயிக்க வைப்போர் குழந்தைகள் தான். குழந்தைகள் கடவுள் கொடுக்கும் வரம் அல்ல; அந்த கடவுளே குழந்தைகள் ரூபத்தில் நம்மை தேடி வருகிறார்கள் என்று தான்சொல்ல வேண்டும். இறைஅம்சம் கொண்ட குழந்தைகளை நாம் இன்றைய சூழ்நிலையில் எப்படி வளர்க்கிறோம் என்பது பெரிய கேள்விக்குறி தான்.''குழலினிது யாழினிது
 குழந்தைகளை கண்ணின் இமையெனக் காப்போம்

மனிதர்கள் நம்மால் படைக்கப்பட்ட அதிசயங்களை விட நம்மை ஒவ்வொரு நாளும் அதிசயிக்க வைப்போர் குழந்தைகள் தான். குழந்தைகள் கடவுள் கொடுக்கும் வரம் அல்ல; அந்த கடவுளே குழந்தைகள் ரூபத்தில் நம்மை தேடி வருகிறார்கள் என்று தான்சொல்ல வேண்டும். இறைஅம்சம் கொண்ட குழந்தைகளை நாம் இன்றைய சூழ்நிலையில் எப்படி வளர்க்கிறோம் என்பது பெரிய கேள்விக்குறி தான்.''குழலினிது யாழினிது என்பதம்மக்கள்மழலைச் சொல் கேளா தவர்''என்ற குறள் கூறுவது போல குழந்தைகளின் மழலைச் சொல்லைவிட இனிமையானது இவ்வுலகில் எதுவும் இல்லை. ஆனால் இன்றைய பெற்றோருக்கு தன்மழலைச்சொல்லை கேட்க கூட நேரம் இல்லை.குழந்தை 'அம்மா' என அழைக்கும் போது எத்தனை பெற்றோர் அதை அருகில் இருந்து கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. பொருளாதார தேவைக்காக கணவன், மனைவி பணிக்கு செல்ல வேண்டியது அவசியம் ஆகிவிட்டது.திருச்சி நடுகாடுபட்டி சுஜீத் வில்சன் சம்பவம் ஒவ்வொரு பெற்றோரின் கண்முன்பும் நிழலாட வேண்டும். இரண்டு வயது பிஞ்சு குழந்தையின் நடவடிக்கையைகண்காணிக்க தவறியதின் விளைவின் தாக்கம் நம்நெஞ்சங்களை நடுங்க வைத்திருக்கிறது.


பாரதியின் வரிகள்''ஓடி விளையாடு பாப்பா - நீஓய்ந்திருக்கலாகாது பாப்பாகூடி விளையாடு பாப்பா - ஒருகுழந்தையை வையாதே பாப்பா''பாரதியின் இந்த வரிகளின்படி வாழ்ந்த கடைசி தலைமுறை நாமாக தான் இருக்கும். பள்ளியில் இருந்து வந்ததும் தெருவில் நண்பர்களுடன் விளையாடினால் பசி உணர்வே வரும். அப்படி விளையாடி பசித்து சாப்பிட்ட கடைசி தலைமுறையும் நாம் தான்.இன்றைய குழந்தைகளுக்கு பசி உணர்வு தெரியாததால் பசி கொடுமை புரிவதில்லை. புரிந்து கொள்ள நாம் வாய்ப்பும் வழங்கவில்லை. நவீன குழந்தைகள் விளையாட்டு என்றால் பந்து, பொம்மையை தேடுவதில்லை நம் அலைபேசியை பறித்து கொள்கிறார்கள். வெளியில் விளையாட சொன்னால் வெயிலை காரணம்காட்டி மறுக்கிறார்கள். வெயிலில் விளையாடாமல் 'டி' விட்டமின் எங்கிருந்து கிடைக்கும்.வீட்டில் இருக்கும் போது குழந்தைகளுடன் நேரத்தை செலவிடாமல், பெற்றோர் எப்போதும் தொலைகாட்சி, அலைபேசியை பார்ப்பதால் தாய், தந்தை பாசம் அறியாமலேயே குழந்தைகள் வளர்கின்றன. நாம் வீட்டிற்குள் சென்றவுடன் குழந்தைகள் ஓடி வந்து நம்மை பார்த்து பூரிக்கும், சிறகடிக்கும்பட்டாம்பூச்சிகள் போல. அவர்களுக்கு தேவையான அன்பும், அக்கறையும் கிடைத்தால் மட்டுமே நல்ல மனநிலையுடன் வளர்வர்.


தினமும் ஒரு மணி நேரம்குழந்தைகளுடன் தினமும் ஒரு மணி நேரம் விளையாடி, ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு, கதை சொல்லி துாங்க வைத்தால் தான் அவர்களுடன் உறவு வலிமையாகும். நம் சொந்த விருப்பு, வெறுப்பு எதுவும் குழந்தைகளை பாதிக்காத வகையில் நடந்து கொள்ள வேண்டியது அவசியம். வீட்டுக்குள் துள்ளி குதிக்கும் குழந்தைகளை ஓரிடத்தில் அமர வைக்க கையில் அலைபேசியை கொடுப்பது, தொலைகாட்சியில் கார்ட்டூன் பார்க்க வைப்பது எவ்வளவு பெரிய தவறு?குழந்தைகள் எதிர்பார்க்கும் விலைமதிப்பில்லா அன்பை கூட கொடுக்க முடியாமல் ஓடி, ஓடி பணம் சம்பாதித்து என்ன பயன், அது யாருக்கு லாபம். இதை உணரும் பெற்றோர்கள் தான் தன் குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பார்கள்.தனிக்குடித்தன வாழ்க்கையில் பெற்றோர் வரும் வரை வீட்டில் தனியாக இருக்கும் குழந்தைகளின் நிலை பரிதாபமானது தான். இந்த இடைவெளி தான் அவர்களைதவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறது.


விட்டுக் கொடுக்கும் பழக்கம்ஒரு பொருள் இருந்து பல குழந்தைகள் இணைந்து விளையாடும் போது தான் பகிர்வு என்ற எண்ணம் வரும். இன்றைய காலகட்டத்தில் இதற்கு பெற்றோர் வாய்ப்பு அளிப்பதாகவே தெரியவில்லை. வீட்டில் எத்தனை குழந்தைகள் இருந்தாலும் தனி அறை, பொருட்கள் என ஒதுக்கப்படுகிறது.இரு குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு வாங்கி தரும் பொருட்களில் சிறு வேறுபாடு கூட இல்லாமல் இருக்க வேண்டும்.குழந்தைகளுக்கு இடையே சண்டை வராமல் இருந்தால் புரிதலும், பாசமும் எங்கிருந்து வரும். கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், சண்டைக்கு பின் குழந்தைகள் அதிக நெருக்கத்துடன் விளையாடுவதை, பேசுவதை உணர முடியும்.சக குழந்தைகளுடன் சண்டையிடும் போது எது சரி, தவறு என்பதை புரிய வைக்க வேண்டிய கடமை நமக்கு இருக்க வேண்டும். குழந்தைகளிடம் பகிர்வு மனப்பான்மையை விதைத்தால் தான் ஒற்றுமை, விட்டுக் கொடுக்கும் பழக்கம் வரும்.குழந்தைகளுக்கு பெற்றோர் பாசம் எவ்வளவு முக்கியமோ அதே போல் கண்டிப்பும் முக்கியம். குழந்தை வீட்டில் ஓடும் போது 'கீழே விழுந்து விடாதே' என கூறுவதில் இருந்து நாள் முழுக்க 'அதை செய்யாதே', 'இதை கொட்டி விடாதே'என்று எதிர்மறையாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.


தோல்வியை தாங்காத குழந்தைகள்ஒரு பொருளை நமக்கு தேவைப்பட்டு வாங்குவதை விட ஆசைப்பட்டு தான் வாங்குகிறோம். நினைத்த பொருட்கள் எல்லாம் கிடைத்துவிட்டால் குழந்தைகள் சிறு தோல்வியை தாங்க மாட்டார்கள். சிறு வயதில் இருந்தே 'நோ' என்ற வார்த்தை கேட்காமல் திடீரென கேட்கும் போது வன்முறை எண்ணம் தான் வரும்.கேட்ட பொருட்கள் கிடைக்கவில்லை என்றால் கீழே விழுந்து, புரண்டு, அழும் குழந்தைகளை இதற்கு சாட்சி. நாம் கேட்டதும் எதுவும் கிடைக்காது, காத்திருந்தால் தான் கிடைக்கும், கிடைக்காமல் கூட போகலாம் என்ற மனநிலையை உருவாக்க வேண்டும். அப்பாவிடம் கிடைக்கா விட்டால், அம்மாவிடம் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கி விடாதீர்.
''அன்பை மறந்து அத்தியாவசியம்மறந்துபண்பை மறந்து பகிர்தல் மறந்துபணத்தைக் கொண்டு பாசத்தை ஈடுசெய்தும்தன்னம்பிக்கை தைரியத்தை இழந்துவிட்டோமோ''என்ற வரிகளுக்கு ஏற்ப விலைமதிப்பில்லா அன்பையும், நேரத்தையும் குழந்தைகளுடன் செலவிடுவோம் அதன் மூலம் கிடைக்கும் நல்ல நினைவுகள், சந்தோஷத்தை இதயத்தில் சேமிப்போம். - எஸ்.ஹேமலதாகுழந்தைகள் நல ஆர்வலர்மதுரை. hemakannan.happy@yahoo.com

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sathish - melbourne,ஆஸ்திரேலியா
28-நவ-201912:50:06 IST Report Abuse
sathish குழந்தைகளை கண் போல காப்போம் ,, ரெக்கை முளைத்ததும் கண்டவனோடு ஓடி போயி நம்மை தீராத துயரில் ஆழ்த்த வேண்டுமல்லவா ? இப்போது தொன்பத்தி ஒன்பது சதம் வயதான பெற்றோரை கண்ணீரில் மூழ்கடித்து தான் இன்றைய வாரிசுகள் ,,ஜாக்கிரதை ,,,ஜாக்கிரதை ,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X