சென்னை:மாவட்ட சமூக நலத் துறையில், இளநிலை உதவியாளர் பணிக்கு, 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடும்ப வன்முறையில் இருந்து, பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ், மாவட்ட சமூக நலத் துறையில், ஒப்பந்த அடிப்படையில், இளநிலை உதவியாளர் பணிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதற்கு, பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்தவராகவும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். மேலும், கணினி அனுபவமுள்ள, தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலம் தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.
அதேபோல், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர், 29ம் தேதிக்குள், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகலாம்.மேலும் விபரங்களுக்கு, 044 - 2526 4568 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.