வீட்டிற்கு தீ வைப்பு ரவுடிக்கு 5 ஆண்டு சிறை| Dinamalar

இந்தியா

வீட்டிற்கு தீ வைப்பு ரவுடிக்கு 5 ஆண்டு சிறை

Added : நவ 28, 2019
Share
புதுச்சேரி: பெண் தர மறுத்ததால் வீட்டுக்கு தீ வைத்தரவுடிக்கு 5ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.பாகூர் அடுத்த இருளன்சந்தையை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகளை, ஒருதலையாக காதலித்து வந்த அதேபகுதியை சேர்ந்த ரவுடி, வினோத்குமார், 29; கடந்தாண்டு அண்ணாமலை வீட்டிற்கு சென்று பெண் கேட்டார்.அதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம்

புதுச்சேரி: பெண் தர மறுத்ததால் வீட்டுக்கு தீ வைத்தரவுடிக்கு 5ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.பாகூர் அடுத்த இருளன்சந்தையை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகளை, ஒருதலையாக காதலித்து வந்த அதேபகுதியை சேர்ந்த ரவுடி, வினோத்குமார், 29; கடந்தாண்டு அண்ணாமலை வீட்டிற்கு சென்று பெண் கேட்டார்.அதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த வினோத்குமார், அண்ணாமலை மற்றும் அவரது மனைவியை கத்தியால் வெட்டினார். மேலும், வீட்டிற்கு தீ வைத்தார். அதில், அண்ணாமலை மற்றும் அருகில் இருந்த சொரூபராணி ஆகியோரின் வீடுகள் எரிந்து சேதமடைந்தன.புகாரின் பேரில், பாகூர் போலீசார், வினோத்குமார் மீது புதுச்சேரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி தாமோதரன், வினோத்குமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X