பொது செய்தி

தமிழ்நாடு

'பச்சை மிளகாய், இஞ்சி சாறு அஸ்வினியை கட்டுப்படுத்தும்'

Added : நவ 28, 2019
Advertisement

கோவில்பாளையம் : சர்க்கார் சாமக்குளம் வட்டார வேளாண் துறை சார்பில், 'அட்மா' மூலம் பூச்சி நோய் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு கோவில்பாளையம் வேளாண் அலுவலகத்தில் நடந்தது.

வேளாண் உதவி இயக்குனர் நிர்மலா வரவேற்று பேசுகையில், ''மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில், மெட்டாரைசியம் ஒரு கிலோ, 135 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது,'' என்றார்.மத்திய திட்ட வேளாண் துணை இயக்குனர் சைலேஷ் பேசுகையில், ''பிரதமரின் உதவி தொகை திட்டத்தில் ஆதார் சரிபார்த்தல் மற்றும் திருத்தங்களை விவசாயிகள் தாங்களே, இணையதளத்தில் செய்து கொள்ளலாம். தோட்டத்தில் முழுமையாக சொட்டு நீர் பாசனம் அமைக்க வேண்டும்,'' என்றார்.

ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா பேராசிரியர் தட்சிணாமூர்த்தி பேசுகையில், ''பூச்சிகளை கட்டுப்படுத்துவதில் விதை நேர்த்தி முக்கிய பங்கு வகிக்கிறது. வரப்பில் ஆமணக்குபயிரிடுதல், வயலில் இனக்கவர்ச்சி பொறி வைத்தல், சூரிய விளக்கு பொறி வைத்தல் ஆகியவை நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும்.இயற்கை பூச்சி விரட்டிகளில் ஒன்றான பச்சை மிளகாய், இஞ்சி சாறு ஆகியவை அஸ்வினி பூச்சியை கட்டுப்படுத்தும்,'' என்றார்.துணை வேளாண் அலுவலர் அங்கராஜ் நன்றி தெரிவித்தார். தொழில்நுட்ப வட்டார மேலாளர் சரண்யா, உதவி மேலாளர்முனுசாமி ஆகியோர்பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X