வில்லியனுார்: வேளாண்துறை ஆத்மா திட்டம் சார்பில் பெருங்களுர் கிராமத்தில் கால்நடைகளுக்கான குடற்புழு நீக்கம் குறித்த செயல் விளக்க மருத்துவ முகாம் நடந்தது.வேளாண் இணை இயக்குனர் சிவராமன் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். முன்னதாக வில்லியனுார் உழவர் உதவியக வேளாண் அலுவலர் ஜோதிகணேசன் வரவேற்றார். திருக்காஞ்சி உழவர் உதவியக வேளாண் அலுவலர் வேலுமணி முகாமின் நோக்கம் குறித்து பேசினார்.வில்லியனுார் அரசு கால்நடை மருத்துவமனை டாக்டர் ஆனந்தராமன், குடற்புழு நீக்குவதன் முக்கியத்துவம் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான சத்துக்கள் கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். கரிக்கலாம்பாக்கம் அரசு கால்நடை மருத்துவமனை டாக்டர்கள் பிரீத்தா, செல்வமுத்து ஆகியோர் ஆடு, மாடுகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகள் வழங்கி, கால்நடை பராமரிப்பு குறித்து பேசினர். முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு, கால்நடைகளுக்கான சத்துணவு மூட்டைகள் வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை ஆத்மா திட்ட தொழில் நுட்ப மேலாளர் சாந்தி, திருக்காஞ்சி உழவர் உதவியாக பணியாளர்கள் வெங்கடேசன், கருணாகரன் செய்திருந்தனர்.