இந்தியா

பழிக்கு பழியாக அன்பு ரஜினி கொலை ரவுடி சோழன் போலீசில் வாக்குமூலம்

Added : நவ 28, 2019
Advertisement

புதுச்சேரி: நண்பர் வினோத் கொலைக்கு பழிக்கு பழியாக, அன்பு ரஜினியை கொலை செய்ததாக, கைதான ரவுடி சோழன் வாக்கு மூலம் அளித்துள்ளார்.முத்தியால்பேட்டை, காட்டாமணிகுப்பத்தை சேர்ந்தவர் அன்பு ரஜினி,35: ரவுடியான இவர், கடந்த 10ம் தேதி காரில் சென்றபோது, வெடிகுண்டு வீசி, வெட்டி கொலை செய்யப்பட்டார். முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர்.இந்த வழக்கில், லாஸ்பேட்டையைச் சேர்ந்த ரவுடி சோழன் மற்றும் அவரது கூட்டாளிகள் துாண்டுதலில், அன்பு ரஜினி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதையடுத்து, வழக்கில் முக்கிய குற்றவாளியாக சோழன் சேர்க்கப்பட்டார்.காலாப்பட்டு காங்., பிரமுகர் சந்திரசேகர் கொலை வழக்கில் சிறையில் இருந்த சோழனை கோர்ட் அனுமதியுடன் கைது செய்த போலீசார், கோர்ட் அனுமதியுடன், இரண்டு நாள் தங்கள் காவலில் வைத்து விசாரித்தனர்.அதில், கூனிமேட்டை சேர்ந்த எனது நண்பர் வினோத் கடந்த ஜூலை மாதம் கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்தவர்களை பழிக்கு பழி வாங்குவோம் என நானும் எனது கூட்டாளிகளும், வினோத் இறுதி சடங்கின்போது சபதம் எடுத்தோம். அதன்படி, வினோத் கொலையில் அன்பு ரஜினி பின்னணியில் இருப்பது தெரியவந்தது. அவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டோம். சரியான நேரம் அமையவில்லை. இதனிடையே நான் சிறை சென்றுவிட்டேன். ஆனாலும் எனது கூட்டாளிகள் மூலம் அன்புரஜினி குறித்து விசாரித்தபடி இருந்தேன். அதன்படி, சரியான சந்தர்ப்பம் பார்த்து, அன்பு ரஜினியை கூட்டாளிகள் தீர்த்துக்கட்டினர் என, வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X