புதுச்சேரி; இந்திய கம்யூ., கட்சியின் மணவெளி தொகுதிக்குழு கூட்டம் அரவிந்தர் நகரில் நடந்தது.கூட்டத்திற்கு அமுதா தலைமை தாங்கினார். மத்திய அரசின் மக்கள் விரோத போக்கு, மாநில அரசின் மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தாத நிலைமைகளையும் மற்றும் எதிர்கால இயக்க வேலை குறித்து மாநில துணை செயலர் கீதநாதன் பேசினார். தொகுதி செயலர் ஏழுமலை பேசினார். கூட்டத்தில் தேவநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், அரவிந்தர் நகர் பெரிய வாய்க்காலை துார்வாரி சீர்படுத்த வேண்டும், கொசு மருந்து அடிக்க வேண்டும். மணவெளி தொகுதி முழுவதும் எரியாமல் உள்ள ைஹமாஸ் விளக்குகளை சீரமைக்க வேண்டும். சுண்ணாம்பாறு போட் அவுஸ் பார்க்கங்கில் சி.சி.டி.வி., கேமரா அமைத்து வாகன திருட்டை தடுக்க வேண்டும். அபிஷேகபாக்கம், நல்லவாடு சாலைகளை அகலப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.