இந்தியா

பாட்மின்டன் போட்டியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா

Added : நவ 28, 2019
Advertisement

புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் தனலட்சுமி நலச்சங்கம் சார்பில், தேசிய அளவில் நடக்கும் பாட்மின்டன் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவருக்கு பாராட்டு விழா நடந்தது.நலச்சங்க அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு, இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார். ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை தலைமை மருத்துவர் சித்ரா வாசுதேவன் முன்னிலை வகித்தார். மின்துறை இளநிலை பொறியாளர் கலையரசி, மடுகரை அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் புவனேஸ்வரி, ஆதர் கண் மருத்துவமனை நிர்வாகி சக்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.விழாவில் புதுச்சேரி குருகுலத்தில் மாநில அளவில் நடந்த பாட்மின்டன் போட்டியில் வெற்றி பெற்று குஜராத்தில் தேசிய அளவில் நடக்கும் பாட்மின்டன் போட்டியில் பங்கேற்க உள்ள மாணவர் ரிஷிக்கு, டாக்டர் வாசுதேவன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.நிகழ்ச்சியில் நலச்சங்கம் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X