சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரோட்டில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு வாகன ஓட்டிகள் திண்டாட்டம்

Added : நவ 28, 2019
Share
Advertisement
உடுமலை : உடுமலை, மலையாண்டிபட்டிணத்தில், ரோட்டோரம் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பதால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். உடுமலை, மலையாண்டிபட்டிணத்தில், 300க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. உடுமலையிலிருந்து, மலையாண்டிபட்டிணம் வழியாக எலையமுத்துார் வரையான ரோடு குறுகலாக இருப்பதால் ஏற்கனவே, வாகன ஓட்டிகள் கவனமாகச்செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதில்,

உடுமலை : உடுமலை, மலையாண்டிபட்டிணத்தில், ரோட்டோரம் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பதால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.

உடுமலை, மலையாண்டிபட்டிணத்தில், 300க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. உடுமலையிலிருந்து, மலையாண்டிபட்டிணம் வழியாக எலையமுத்துார் வரையான ரோடு குறுகலாக இருப்பதால் ஏற்கனவே, வாகன ஓட்டிகள் கவனமாகச்செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதில், மலையாண்டிபட்டிணத்தில், குறுகலான ரோட்டையும் சிலர் ஆக்கிரமித்து கடைகள் போடுவதால், பொதுமக்கள் பல இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

மலையாண்டிபட்டிணம், ரேஷன் கடை அருகே, மாலை நேரங்களில் ரோட்டோரத்தில், தள்ளுவண்டிகள் அமைத்துக்கொள்கின்றனர்.இதனால், இரவில், அந்த ரோட்டின் வழியாக பஸ் மற்றும் சரக்கு வாகனங்கள் வரும் போது, எதிரே மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளது. மேலும், மாலை நேரங்களில், தள்ளுவண்டி கடைகளில் விற்கும் சிற்றுண்டிகளுக்கு, கூடும் 'குடிமகன்கள்', பாட்டில்களை வீசி விட்டு செல்கின்றனர்.பஸ் ஸ்டாப்பில் இவ்வாறு அட்டகாசம் செய்வதால், பணிக்கு சென்று பஸ்சில் திரும்பும் பெண்கள், இரவு பணிக்குச்செல்வோர் என பலரும் அச்சத்தோடும், கடந்து செல்கின்றனர்.

பஸ் ஸ்டாப் அருகில் குடியிருக்கும் மக்கள் நிம்மதி இழந்துள்ளனர்.எனவே, இதுகுறித்து போலீசாரும், ஊராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X