நெட்டப்பாக்கம்: பனையடிக்குப்பம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் இன்று காலை 10.00 மணிக்கு நடக்கிறது.பாகூர் அடுத்த பனையடிக்குப்பம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் இன்று காலை 10.00 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை 5.00 மணிக்கு அனுக்ஞை பூஜை, விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவகிரக ஹோமம், முதல்கால யாக பூஜை நடந்தது.நேற்று மங்கள இசை, இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக சாலை பூஜை, பூர்ணாஹூதி, சதுர்வேதி பாராயணம், நாத உபாசரம், கீதை உபாசரம், தீபாரதனை நடந்தது. இன்று காலை 7.30 மணிக்கு மங்கள இசை, நான்காம் கால யாக பூஜை, கோமாதா பூஜை, ரக் ஷாபந்தனம், நாடி சந்தனம், காலை 8.30 மணிக்கு 4 ம் கால மகா பூர்ணாஹூதி யாத்ராதானம், கடம் புறப்பாடாகி காலை 10:00 மணிக்குள் முத்துமாரியம்மன் விமான மற்றும் பரிவார மூலாலய மகா கும்பாபி ேஷகம் விழா நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு அம்மன் வீதியுலா நடக்கிறது.