இந்தியா

பெண்கள் வன்கொடுமை விழிப்புணர்வு முகாம்

Added : நவ 28, 2019
Advertisement

நெட்டப்பாக்கம்: பெண்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து மகளிர் மேம்பாடு அரசு செயலர் ஆலிஸ்வாஸ் பேசினார்.புதுச்சேரி தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் கருணாலயம் கிராம நலச்சங்கம் சார்பில், பெண்கள்-பெண் குழந்தைகள் அதிகாரம் பெறுதல், ஆரோக்கியம், வன்முறையில் இருந்து பாதுகாத்தல் குறித்து ஒருங்கிணைந்த தொடர்பியல் விழிப்புணர்வு முகாம் மடுகரை முத்துநகரில் நடந்தது.மக்கள் தொடர்பு அலுலவலகம் உதவி இயக்குனர் சிவக்குமார் தலைமை தாங்கினார். கருணாலயம் கிராம நலச்சங்க இயக்குனர் அங்காளன் வரவேற்றார். நலவழித்துறை குடும்ப நலம் துணை இயக்குனர் அல்லிராணி துவக்கவுரையாற்றினர். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் யஷ்வந்தையா, பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சமூக நலத்துறை அரசு செயலர் ஆலிஸ் வாஸ், பெண்கள் வன்கொடுமை, அதனை எவ்வாறு தடுப்பது, பெண்களுக்கான திட்டங்கள் குறித்து பேசினார். குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் தேவிப்பிரியா பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் வன்கொடுமை குறித்தும், பெண்களுக்கான சட்டங்கள் குறித்து பேசினார்.நிகழ்ச்சியில், கிராம நலச்சங்க ஆலோசகர் சித்ரா, ஒருங்கிணைப்பாளர் அபிராமி, ஆலோசகர் சுகன்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.கள விளம்பர உதவியாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X