பொது செய்தி

தமிழ்நாடு

கைதிகள் தயாரித்த பொருட்கள் கமிஷனர் அலுவலகத்தில் விற்பனை

Added : நவ 28, 2019
Share
Advertisement
சென்னை:தமிழக சிறை கைதிகளால் தயாரிக்கப்பட்ட, விதவிதமான பொருட்கள், குறைந்த விலையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விற்கப்படுகிறது.தமிழகத்தில், 138 சிறைகள் உள்ளன. இவற்றில், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக புழல், வேலுார் உள்ளிட்ட, ஒன்பது மத்திய சிறைகளில், பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.அதன் வாயிலாக, கைதிகளுக்கு,
 கைதிகள் தயாரித்த பொருட்கள் கமிஷனர் அலுவலகத்தில் விற்பனை

சென்னை:தமிழக சிறை கைதிகளால் தயாரிக்கப்பட்ட, விதவிதமான பொருட்கள், குறைந்த விலையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விற்கப்படுகிறது.

தமிழகத்தில், 138 சிறைகள் உள்ளன. இவற்றில், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக புழல், வேலுார் உள்ளிட்ட, ஒன்பது மத்திய சிறைகளில், பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.அதன் வாயிலாக, கைதிகளுக்கு, டெய்லரிங், ஷூக்கள் தயாரிப்பு, போலீஸ் சீருடைகள் தைத்தல், விவசாயம், பேக்கரி பொருட்கள் தயாரிப்பு, முறுக்கு, கடலை மிட்டாய் தயாரிப்பு, எம்ப்ராய்டிங், வேட்டி, ரெடிமேட் சட்டை, போர்வை தயாரிப்பு உள்ளிட்ட கலைகள் கற்றுத் தரப்படுகின்றன.கைதிகள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்தி, அதன் வாயிலாக கிடைக்கும் தொகையை, சம்பளமாக வழங்கப்படுகிறது. இதனால், கைதிகள், தங்கள் மீதான வழக்கை நடத்துவதற்கான செலவு தொகையை, இதன் வாயிலாகவே சம்பாதித்து வருகின்றனர்.மற்ற நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை விட, கைதிகள் தயாரித்த பொருட்கள், குறைந்த விலைக்கே விற்கப்படுகிறது. இந்த பொருட்களை, 'ஆன்லைன்' வாயிலாக விற்பனை செய்யவும் சிறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இந்நிலையில், தமிழக சிறை கைதிகளால் தயாரிக்கப்பட்ட பொருட்கள்,சென்னை போலீஸ்கமிஷனர் அலுவலகத்தில், நேற்று முதல் விற்கப்படுகிறது.இங்கு, செக்கு எண்ணெய், ரெடிமேட் சட்டை என, விதவிதமான பொருட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த அங்காடி, 29ம் தேதி வரை செயல்படும் என, சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X