புதுச்சேரி: அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்களுக்கு,வழங்கிட உள்ள மானியங்கள் மீதான ஆட்சேபனை இருந்தால், வரும் 6ம் தேதிக்குள் தெரியப்படுத்தலாம்.இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடுவிடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி மாநில விளையாட்டு குழுமம், விளையாட்டு மேம்பாட்டிற்காக அங்கீகரிக்கப்பட்ட மாநில அளவிலான விளையாட்டு சங்கங்களுக்கு பல்வேறு வகைகளில் மானியங்களைவழங்கி வருகிறது. அதன்படி, ஆண்டு மானியமாக 27 லட்சத்து 61 ஆயிரத்து 400 ரூபாயும், பங்கேற்பு மானியமாக 74 லட்சத்து 77 ஆயிரத்து 231 ரூபாயும், ஒருங்கிணைப்பு மானியமாக 10 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் என மொத்தம் ஒரு கோடியே 12 லட்சத்து 51 ஆயிரத்து 131 ரூபாய் வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் விவரங்கள், ஆண்டு வாரியாக வழங்கிட உள்ள மானியங்கள் போன்ற விவரங்கள் பள்ளி கல்வித்துறை இயக்குனரகத்தின் www.schooledn.py.gov.in என்றஇணையதளத்தில்வெளியிடப்படுகின்றது. ஆட்சேபனை இருப்பின் வரும் 6ம் தேதிக்கு முன்னதாக எழுத்து பூர்வமாக, பள்ளி கல்வித்துறை இயக்குனரகத்திற்கு அனுப்பிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.