சென்னை:அடையாறு ஆற்றை ஒட்டி, மாநகராட்சிக்கு சொந்தமான, 14 ஏக்கர் இடத்தில் அமைய உள்ள, ஹாக்கி மைதானம், பூங்கா, சைக்கிள் பாதை திட்டங்கள் குறித்து, நேற்று முன்தினம் , கமிஷனர் பிரகாஷ் ஆய்வு செய்தார்.
சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை, அனைத்து துறையினரை ஒருங்கிணைத்து, அடையாறு, கூவம் நதிகளை சீரமைத்து வருகிறது.அடையாறு, திரு.வி.க., பாலத்தை ஒட்டிய ஆற்றின் அகலம், 1,600 அடி அகலம் கொண்டது. ஆற்றின் கரையில், 14 ஏக்கர் பரப்பளவில், மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. இதில், தனியார் கல்லுாரி ஆக்கிரமிப்பில் இருந்த, 5 ஏக்கர் இடம் சமீபத்தில் மீட்கப்பட்டது.மொத்த இடத்தில், கட்டடம் சார்ந்த கட்டமைப்புகள் அமைக்கக் கூடாது என, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. இந்த இடத்தில், ஒரு ஹாக்கி மைதானம் உள்ளது. அதோடு, பூங்கா, நடைபாதை, சைக்கிள் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான கள ஆய்வு நேற்று முன்தினம் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். திறந்தவெளி கட்டமைப்புகள் அமைக்க தயாரித்த வரைபடத்தை, அதிகாரிகள் கமிஷனரிடம் விளக்கினர்.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: அடையாறு ஆற்றை ஒட்டிய, திறந்தவெளி இடங்கள் பயனுள்ளதாக மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே இருக்கும், ஹாக்கி மைதானம் மேம்படுத்தப்படும். அதோடு, நடைபயிற்சியுடன் கூடிய பூங்கா, சைக்கிள் பாதை அமைக்க மதிப்பீடு தயாரிக்கப்படுகிறது. பொதுமக்கள் பாதிக்காத வகையில், கழிவு நீரை சுத்திகரித்து ஆற்றில் விடப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE