இந்தியா

பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் ஊழியர்கள் உண்ணாவிரதம்

Added : நவ 28, 2019
Advertisement

புதுச்சேரி: பி.எஸ்.என்.எல்., அலுவலகத்திற்குள் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொது மேலாளர் அலுவலகம் எதிரில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என, பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் சங்கமும், ஒப்பந்த ஊழியர்கள் சங்கமும் அறிவித்து இருந்தன.இந்நிலையில், பி.எஸ்.என்.எல்., அலுவலக வளாகத்திற்குள் திரண்ட ஊழியர்கள், முதல் மாடியில் உள்ள பொது மேலாளர் அலுவலக அறைக்கு எதிரில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு நிலவியது. போராட்டத்துக்கு, ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கொளஞ்சியப்பன், ஒப்பந்த ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். நிர்வாகிகள் சுப்ரமணியன், முருகையன், ரவிச்சந்திரன், செல்வம், பிரதிபா, சக்திவேல் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.போராட்டத்தில், மாவட்ட பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் பாரபட்ச போக்குடன் செயல்படுவதை கண்டித்தும், ஒப்பந்த ஊழியர்களுக்கு 9 மாத நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும், ஆட்குறைப்பு செய்யக் கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.கேபிள் பகுதி கிளை செயலர் மாதவன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X