இந்தியா

'எஸ்.ஐ., விபல்குமார் தற்கொலை வழக்கு

Added : நவ 28, 2019
Advertisement

புதுச்சேரி: சப் இன்ஸ்பெக்டர் விபல்குமார் தற்கொலை தொடர்பாக, 30ம் தேதி, சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம், பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.நெட்டப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த விபல்குமார், கடந்த 21ம் தேதி துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். உயரதிகாரிகள் டார்ச்சர் இருந்ததால், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், வழக்கு சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றப்பட்டது.சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., ராஜசேகர் வல்லட், இன்ஸ்பெக்டர் சத்யநாராயணா தலைமையிலான குழுவினர், நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் விபல்குமார் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர். அங்கிருந்த பதிவேடுகள், விபல்குமாரின் அறையில் இருந்த ஆவணங்கள், அவர் எழுதியதாக கூறப்படும் கடிதம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அங்கு பணி செய்யும் உதவி சப் இன்ஸ்பெக்டர், போலீசாரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., சீனியர் எஸ்.பி., நிகாரிகா பட், வரும் 30ம் தேதி நெட்டப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை நடத்த உள்ளார். அப்போது போலீசார், பொதுமக்கள், விபல்குமார் உறவினர்கள், தங்களுக்கு தெரிந்த தகவல்களை நேரில் தெரிவிக்கலாம். நேரில் வர இயலாதவர்கள் 94892 05246, 94882 20222 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொண்டும், வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்பியும் தெரிவிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விபல்குமாரின் தற்கொலை வழக்கு விசாரணை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X