இந்தியா

ஆடு வளர்ப்பு குறித்து வயல்வெளி பள்ளி

Added : நவ 28, 2019
Advertisement

காரைக்கால்: காரைக்கால் வேளாண் துறை சார்பில் ஆடு வளர்ப்பது குறித்து வயல்வெளி பள்ளி நடைபெற்றது.தென்னங்குடி உழவர் உதவியகத்தில், மகளிர் ஆத்மா குழு சார்பில் ஆடு வளர்ப்பு குறித்து ஆறு வார வேளாண் வயல்வெளிப் பள்ளி தொடக்க விழா நடைபெற்றது. கூடுதல் வேளாண் இயக்குநர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கால்நடைத்துறை இணை இயக்குனர் லதா மங்கேஷ்கர். தென்னங்குடி கால்நடை மருத்துவர் சுரேஷ் முன்னிலை வகித்தனர்.வேளாண் பள்ளியின் நோக்கம் மற்றும் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து கால்நடைத்துறை இணை இயக்குனர் ஆடு வளர்ப்பின் முக்கியத்துவம் மற்றும் அதை சந்தைப்படுத்தும் முறை குறித்து விளக்கினார்.நிகழ்ச்சியில் 25க்கும் மேற்பட்ட மகளிர் கால்நடை விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X