பாகூர்: குருவிநத்தம் துாக்குபாலம் சந்திப்பில் உள்ள ைஹமாஸ் விளக்கு எரியாமல் உள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.பாகூர் அடுத்துள்ள குருவிநத்தம் துாக்குபாலம் நான்கு முனை சந்திப்பு வழியாக தினமும் பண்ருட்டி, நெய்வேலி, கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால், அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வந்தன. இதனையடுத்து, 10 ஆண்டுகளுக்கு முன்பு குருவிநத்தம் துாக்கு பாலத்தில் சித்தேரி சாலையை ஒட்டிய பகுதியில் ைஹமாஸ் விளக்கு அமைக்கப்பட்டது.இதனால், துாக்குபாலம் நான்கு முனை சந்திப்பு இரவு நேரங்களில், நல்ல வெளிச்சமாக இருந்து வந்ததால், விபத்துக்கள் நடைபெறுவது தடுக்கப்பட்டது.இந்நிலையில், இரண்டுஆண்டிற்கு முன் ைஹமாஸ் விளக்கு பழுதடைந்தது. அதனை இதுவரை சரி செய்யப்படாமல் அப்படியேவிடப்பட்டுள்ளது.இது குறித்து கடந்த ஆண்டு குருவிநத்தம் கிராமத்திற்கு ஆய்வுக்கு வந்த கவர்னர் கிரண்பேடியிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர். ஆனாலும், இதுவரை ைஹமாஸ் விளக்கு சரி செய்யப்படாமல் உள்ளது.இதனால், துாக்குபாலம் பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் மீண்டும் விபத்துகள் நடைபெற்று வருகிறது. இந்த ைஹமாஸ் விளக்கு விரைவில் சரி செய்யப்படவில்லை எனில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நுாதன போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.எனவே, வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களின் நலன் கருதி, குருவிநத்தம் துாக்கு பாலம் சந்திப்பில் எரியாமல் உள்ள ஹைமாஸ் விளக்கினை சரி செய்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.