இந்தியா

மினிலாரி, மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல்: ஒருவர் கைது

Added : நவ 28, 2019
Advertisement

பாகூர்: மணல் திருட்டில் ஈடுபட்ட மினி லாரி மற்றும் இரண்டு மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.பாகூர் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது, சோரியாங்குப்பம் வழியாக இரண்டு மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தவர்கள், போலீசாரை கண்டதும் வண்டிகளை நிறுத்திவிட்டு தப்பினர்.அதனைத் தொடர்ந்து இரு மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக வழக்கு பதிந்து தப்பியோடிய, ,சோரியாங்குப்பத்தை சேர்ந்த ஸ்டாலின் 46; ராஜாமணி 52; தேடிவருகின்றனர்.மற்றொரு வழக்குஅரியாங்குப்பம் போலீசார் ரோந்து சென்றபோது, அரிக்கன்மேடு பகுதியில் பிஒய் 01 பிபீ 3507 பதிவெண் கொண்ட மினி லாரி மணலுடன் புறப்பட தயாராக இருந்தது. போலீசாரை கண்டதும் மினிலாரியில் இருந்த நான்கு பேர் தப்பி ஓடினர். அவர்களில் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், அவர் சாரம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்,25; என்பதும், மணவெளியை சேர்ந்த சார்லஸ், சூரியா, ஆனந்த் ஆகியோர் தப்பிச் சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது.இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து கார்த்திகேயனை கைது செய்தனர். மேலும், மினி லாரியை பறிமுதல் செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X