இந்தியா

எஸ்.ஐ., தற்கொலை வழக்கு சி.பி.ஐ., விசாரணை கேட்டு போராட்டம்

Added : நவ 28, 2019
Advertisement

புதுச்சேரி: சப் இன்ஸ்பெக்டர் விபல்குமார் தற்கொலை வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி, லஞ்ச ஒழிப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.புதுச்சேரி நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் விபல்குமார் தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், விபல்குமார் தற்கொலைக்கு காரணமாக கூறப்பட்ட கலைச்செல்வன் ஆயுதப்படைக்கு மாற்றபட்டார்.இந்நிலையில்,விபல்குமார் மரணத்திற்கு நீதி வேண்டும்,அவரது தற்கொலைக்கு காரணமாக கூறப்படும் இன்ஸ்பெக்டரை கைது செய்ய வேண்டும், வழக்கை சி.பி.ஐ., க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, தொல்காப்பியர் லஞ்ச ஒழிப்பு இயக்கம் சார்பில்,முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் ராஜாராம்குருமாம்பேட்டில் உள்ள அவரது வீட்டு முன்பு உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளார்.விபல்குமாரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், சில சமூக அமைப்பினரும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X