தஞ்சாவூர், தஞ்சையில் அரசு பெண் ஊழியர் மற்றும் அவரது கள்ளக்காதலன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பெண் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்தவர் வனிதா 36; தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறையில் அலுவலக உதவியாளர். கணவரை இழந்த இவருக்கு கனகராஜ் 34 என்ற கள்ளக்காதலன் இருந்தார். வனிதாவின் சித்தி மகன் பிரகாஷ் 32. இவரிடம் வனிதா 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கி 50 ஆயிரம் ரூபாயை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்தார்.ஆத்திரமடைந்த பிரகாஷ் தன் கள்ளக்காதலி மகேஸ்வரி 34 மற்றும் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து நேற்று முன்தினம் வனிதா வீட்டில் வனிதா அவரது கள்ளக்காதலன் கனகராஜ் ஆகியோரை வெட்டி கொலை செய்தார்.மருத்துவக் கல்லுாரி போலீசார் நான்கு பேரையும் தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு தஞ்சை அருகே பதுங்கியிருந்த பிரகாஷ் உள்ளிட்ட நால்வரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.