சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொள்ளையன் முருகனுக்கு 'கஸ்டடி'

Added : நவ 28, 2019
Advertisement

திருச்சி, லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்த முருகனை திருச்சி மாநகர போலீசார் ஏழு நாட்கள் 'கஸ்டடி' எடுத்துள்ளனர்.திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கடையில் அக்.2ம் தேதி 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளை சம்பவம் தொடர்பாக திருவாரூரைச் சேர்ந்த முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முருகனை கஸ்டடி எடுத்து விசாரிப்பதற்காக திருச்சி மாநகர தனிப்படை போலீசார் பெங்களூரு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர்.நேற்று முன்தினம் நீதிமன்ற அனுமதி பெற்று பெங்களூரிலிருந்து பலத்த பாதுகாப்புடன் முருகனை திருச்சிக்கு அழைத்து வந்தனர்.நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி திரிவேணி முன் ஆஜர்படுத்தி முருகனை நீதிமன்ற காவலில் வைத்தனர்.தொடர்ந்து முருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு தனிப்படை போலீசார் நேற்று காலை திருச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி திரிவேணி ஏழு நாட்கள் முருகனை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X