சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து போலீசாருக்கு, புது வரவாக, ஒருவர் மட்டுமே நின்றபடி பயணிக்கும், நவீன ரோந்து வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
சென்னை மாநகர போக்குவரத்து போலீசாருக்கு, ரோந்து பணிக்கு என, ஏற்கனவே, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளன.தற்போது, புதிதாக, ஒருவர் மட்டுமே, நின்ற படி, 20 கி.மீ., வேகத்தில் பயணிக்கும், 'செல்ப் பேலன்சிங் ஸ்கூட்டர்' வகையைச் சேர்ந்த, மூன்று வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.பேட்டரியால் செயல்படும், இந்த ரோந்து வாகனத்தின் எடை, 58 கிலோ. ஒளிரும் விளக்கு, முதல் உதவி பெட்டிகள் இருக்கும். 110 கிலோவிற்கு உட்பட்டவர் மட்டுமே பயணிக்க முடியும். பேட்டரியால் செயல்படக்கூடியது.
ஆறு மணி நேரம், 'சார்ஜ்' ஏற்ற வேண்டும். குறுகலான சாலைகள் மற்றும் கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளில் பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.போலீசாரின் ரோந்து பணிக்கு ஏற்ப, இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அசோக் லேலாண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த வாகனத்தின் செயல்பாடு குறித்து, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று, போக்குவரத்து தெற்கு மண்டல இணை கமிஷனர் எழிலரசன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த வாகனத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், 'புதிய வகை ரோந்து வாகனங்களை, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் விரைவில், அறிமுகம் செய்ய உள்ளார். அன்று முறைப்படி அறிவிக்கப்படும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE