புதுச்சேரி: யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனம் புதுச்சேரி மண்டல அலுவலகம் சார்பில்,கண்காணிப்பு விழிப்புணர்வு வார விழாகொண்டாடப்பட்டது.அதன் ஒரு பகுதியாக, லாஸ்பேட்டை, காலாப்பட்டு, கதிர்காமம், கோரிமேடு, கலித்தீர்தாள்குப்பம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும், ஜிப்மர் வளாகத்தில் உள்ளகேந்திர வித்யாலயா பள்ளி, லாஸ்பேட்டை தாகூர் அரசு கல்லுாரி, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி, சாரதாகங்காதரன் கலை அறிவியல் கல்லுாரி, மணக்குள விநாயகர் தொழில் நுட்ப கல்லுாரிகளில்,மாணவ- மாணவிகளுக்கும், அலுவலக ஊழியர்களுக்கும் பேச்சுமற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது.இதில், வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கான பரிசளிப்பு விழா புதுச்சேரியில் உள்ளயுனை டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில்நடந்தது.இதில், சிறப்பு மண்டல மேலாளர் முத்துக்கிருஷ்ணன், மண்டல மேலாளர் ராஜகோபால் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகள் மற்றும் ஊழியர்களுக்குசான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினர். கண்காணிப்பு அலுவலர் தேவராஜன், ஒருங்கிணைப்பாளர் குப்பீஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.