குளம் நிரம்பியதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குளம் நிரம்பியதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது

Added : நவ 28, 2019
Share
உடுமலை : ஆலாம்பாளையம் குளத்தில், தண்ணீர் தேக்குவதால், சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். உடுமலை அருகே ஆலாம்பாளையத்தில், 76 ஏக்கர் பரப்பில், பூசாரிநாயக்கன் குளம் அமைந்துள்ளது. இக்குளத்துக்கு முன்பு, மழை நீர் ஓடைகள் மூலம் நீர்வரத்து கிடைத்து வந்தது.பருவமழை பொழிவு குறைவு உட்பட காரணங்களால், ஆண்டில் பல
 குளம் நிரம்பியதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது

உடுமலை : ஆலாம்பாளையம் குளத்தில், தண்ணீர் தேக்குவதால், சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

உடுமலை அருகே ஆலாம்பாளையத்தில், 76 ஏக்கர் பரப்பில், பூசாரிநாயக்கன் குளம் அமைந்துள்ளது. இக்குளத்துக்கு முன்பு, மழை நீர் ஓடைகள் மூலம் நீர்வரத்து கிடைத்து வந்தது.பருவமழை பொழிவு குறைவு உட்பட காரணங்களால், ஆண்டில் பல மாதங்கள் தண்ணீரின்றி குளம் வறண்டு காணப்படும்; சுற்றுப்பகுதியில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, தென்னை சாகுபடியும் பாதிக்கும் நிலை இருந்தது.திருமூர்த்தி அணை கட்டப்படும் முன்னர், பாலாற்றின் மூலம் பூசாரிநாயக்கன்குளத்துக்கு நீர்வரத்து கிடைத்தது;

அதன் அடிப்படையில், பி.ஏ.பி., துணை அமைப்பாக குளத்தை சேர்த்து தண்ணீர் வழங்க விவசாயிகள் வலியுறுத்தினர்.நீண்ட கால போராட்டத்துக்குப்பிறகு, கடந்த, 2012 முதல், பி.ஏ.பி., திட்டத்தில் குளத்துக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. தற்போது, மண்டல பாசன காலத்தில், அரசாணை அடிப்படையில், பூசாரிநாயக்கன்குளத்துக்கு, பி.ஏ.பி., வாய்க்காலில், இருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. இவ்வாறு, குறிப்பிட்ட இடைவெளியில், குளத்துக்கு தண்ணீர் நிரப்பப்படுவதால், சுற்றுப்பகுதியில், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

விவசாயிகள் கூறுகையில், 'பி.ஏ.பி., வாய்க்காலில் இருந்து, குளத்துக்கு தண்ணீர் வரும் ஓடையை குறிப்பிட்ட இடைவெளியில், சீரமைக்க வேண்டும். ஆண்டுக்கு இரு முறை குளத்தை நிரப்பினால், சுற்றுப்பகுதியிலுள்ள, 15 கிராமங்களில், நிலத்தடி நீர் மட்டம், நிலையாக இருக்கும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X