இந்தியா

மின்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை

Added : நவ 28, 2019
Advertisement

புதுச்சேரி: 'முதலியார்பேட்டை தொகுதியில் 10 இடங்களில் புதிய டிரான்ஸ்பார்மர்களை அமைத்து தர வேண்டும்' என, பாஸ்கர் எம்.எல்.ஏ., வலியுறுத்தினார்.முதலியார்பேட்டை தொகுதியில் நிலவும் மின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக, அந்த தொகுதியின் எம்.எல்.ஏ., பாஸ்கர், மின்துறை கண்காணிப்புப் பொறியாளர் முரளியை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். உதவிப் பொறியாளர் ரமேஷ், இளநிலைப் பொறியாளர் செல்வபாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.தொகுதியில் பல புதிய நகர்கள் உருவாகி, வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, மின்சார தேவையை கருத்தில் கொண்டு, புதியதாக 10 இடங்களில் புதிய டிரான்ஸ்பார்மர்களை உடனடியாக அமைத்து தர வேண்டும் என, பாஸ்கர் எம்.எல.ஏ., வலியுறுத்தினார்.மேலும், தெரு விளக்குகள் சரியான நேரத்தில் எரிவதற்கு வசதியாக, பழுதடைந்துள்ள டைமர்களை உடனடியாக மாற்றுவது, சேதமடைந்துள்ள மின் கம்பங்களை உடனடியாக மாற்றி அமைப்பது உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X