பொது செய்தி

தமிழ்நாடு

சத்துமிக்க உப்புக்கட்டி! விலங்குகளை நோயில் இருந்து பாதுகாக்க... நீராதாரங்களில் வைக்க வனத்துறை திட்டம்

Added : நவ 28, 2019
Share
Advertisement
பெ.நா.பாளையம் : வன விலங்குகளை, நோய்களில் இருந்து பாதுகாக்க, வனத்தில் நீராதாரம் உள்ள பகுதிகளில், ஊட்டச்சத்துமிக்க உப்புக்கட்டிகளை வைக்கும் திட்டத்தை, பெரிய நாயக்கன்பாளையம் வனத்துறையினர் செயல்படுத்தவுள்ளனர். பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து, இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி, காட்டு யானைகள் ஊருக்குள் புகுவது
 சத்துமிக்க உப்புக்கட்டி! விலங்குகளை நோயில் இருந்து பாதுகாக்க... நீராதாரங்களில் வைக்க வனத்துறை திட்டம்

பெ.நா.பாளையம் : வன விலங்குகளை, நோய்களில் இருந்து பாதுகாக்க, வனத்தில் நீராதாரம் உள்ள பகுதிகளில், ஊட்டச்சத்துமிக்க உப்புக்கட்டிகளை வைக்கும் திட்டத்தை, பெரிய நாயக்கன்பாளையம் வனத்துறையினர் செயல்படுத்தவுள்ளனர்.

பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து, இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி, காட்டு யானைகள் ஊருக்குள் புகுவது வாடிக்கையாக உள்ளது.இவற்றை தடுக்க, சூரிய மின் வேலி, அகழி, ராட்சத பேட்டரி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை, வனத்துறையினர் செயல்படுத்தினர். ஆனாலும், யானை ஊடுருவலை, முழுமையாக தடுக்க முடியவில்லை. யானை மட்டுமல்லாமல் மான், காட்டு மாடு, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளும், கிராமங்களுக்குள் நுழைவது அதிகரித்துள்ளது.

வனத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைதான், பெரும்பாலான விலங்குகள் ஊருக்குள் நுழைய காரணம் என்ற முடிவுக்கு வந்த வனத்துறையினர், பெரியநாயக்கன் பாளையம் மலையோரத்தில் விலங்குகளுக்கான தண்ணீர் தொட்டிகளை அமைத்தனர். அவற்றில், எப்போதும் தண்ணீர் இருக்கும் வகையில், தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.மூணு குட்டை பகுதியில், சோலார் வாயிலாகவும் மற்ற இடங்களில் மின் இணைப்பு வாயிலாகவும், மோட்டார்கள் இயக்கப்பட்டு, தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பப்படுகிறது.

இத்தொட்டிகளை வனத்துறையினர், குறிப்பிட்ட கால இடைவெளியில் துாய்மை செய்கின்றனர். இத்தொட்டிகளில் நீர் நிரப்புவதோடு, அவற்றுக்கு அருகில், வனவிலங்குகளுக்கு நோய் எதிர்ப்பு சக்திகளை கொடுக்கும், உப்புக்கட்டிகளை வைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த உள்ளனர்.மேலும், பாலமலை, பெருக்குபதி மலைக் கிராமத்தில் வனத்துறையால், கட்டப்பட்ட கசிவுநீர் குட்டைகளில், கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையாலும், வற்றாத வன ஓடைகளாலும் நீர் நிறைந்துள்ளது. இப்பகுதிகளிலும் உப்புக் கட்டிகள் வைக்க உள்ளனர்.

பூச்சி மருந்துகளால்...பொதுவாக, வன விலங்குகளுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். ஆனால், யானை உள்ளிட்ட வனவிலங்குகள், தண்ணீர், உணவு தேடி மலையோர கிராமம் மற்றும் விளை நிலங்களுக்குள் புகுந்துவிடுகின்றன. பூச்சி மருந்து தெளித்த பயிர்களை உண்ணுகின்றன. இதனால், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, பல்வேறு நோய்கள் தாக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டன. கிராமங்களில் உள்ள கால்நடைகளாலும் வனவிலங்குகளுக்கு பல்வேறு நோய்கள் பரவுகின்றன.எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!

பெரியநாயக்கன் பாளையம் வனச்சரக அலுவலர் சுரேஷ் கூறுகையில், ''வன விலங்குகளில், குறிப்பாக, யானைகள் வயிறுக் கழிச்சல் நோயால் பாதிக்கின்றன. பெரும்பாலான யானைகளின் இறப்புக்கு இந்நோயே காரணமாக உள்ளது. இதை தடுக்க, இரும்பு, கால்சியம், மாங்கனீசு உள்ளிட்ட ஊட்டச்சத்துமிக்க உப்புக்கட்டிகளை நீராதாரங்கள் அருகே வைக்கவுள்ளோம். இதை உண்டால், விலங்குகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X