கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தடய அறிவியல் துறை விசாரணை பாத்திமா தந்தை, சகோதரி ஆஜர்

Added : நவ 28, 2019
Advertisement

சென்னை:சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப்பின் தந்தை மற்றும் சகோதரி ஆகியோர் தடய அறிவியல் துறை அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராகினர்.கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாத்திமா லத்தீப் 21. இவர் சென்னை ஐ.ஐ.டி. உயர் கல்வி நிறுவனத்தில் முதுநிலை பட்டப் படிப்பு படித்தார். அங்குள்ள விடுதி அறையில் பாத்திமா லத்தீப் 9ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.'என் மரணத்திற்கு சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட மூன்று பேராசிரியர்களே காரணம்' என அவர் தன் அலைபேசியில் பதிவு செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் சிறப்பு தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பாத்திமா லத்தீப்பின் மரணம் தற்கொலையே என தெரிய வந்தது.அதைத் தொடர்ந்து சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட மூன்று பேராசியர்கள் தோழிகள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர். பாத்திமா லத்தீப்பின் அலைபேசி மற்றும் இ - மெயில் பதிவுகள் குறித்து ஆய்வு செய்ய தடய அறிவியல் துறையினரின் சோதனைக்கு அனுப்பினர்.இந்த அலைபேசியை தங்கள் முன் ஆய்வு செய்ய வேண்டும் என பாத்திமா லத்தீப்பின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். சென்னை டி.ஜி.பி. அலுவலகம் அருகே உள்ள தடய அறிவியல் துறை அலுவலகத்தில் பாத்திமா தந்தை அப்துல் லத்தீப், சகோதரி ஆயிஷா ஆகியோர் ஆஜராகினர். இவர்கள் பாத்திமா லத்தீப்பின் அலைபேசியை 'அன்லாக்' செய்து கொடுத்தனர்.அப்துல் லத்தீப் கூறியதாவது:தடய அறிவியல் துறையினர் பாத்திமா லத்தீப் வீட்டில் பயன்படுத்தி வந்த மடிக்கணினி கையடக்க கணினி ஆகியவற்றை கேட்டனர். கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தியிடம் ஒப்படைப்பதாக தெரிவித்தோம். அவர்களுக்கு கிடைத்த சில தடயங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தினர்; பதில் அளித்தோம். விசாரணை சரியான திசையில் செல்வதாக நம்புகிறோம். குற்றவாளிகள் தப்பித்து விடாமல் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X