இந்தியா

இளம் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : நவ 28, 2019
Advertisement

பாகூர்: கொரவள்ளிமேடு தியாகி சுப்ரமணியப்படையாச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில், இளம் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.தேர்தல் கல்வி குழு சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி துணை முதல்வர் அம்பிகா தலைமை தாங்கினார். தேர்தல் கல்வி குழு வழிகாட்டி ஆசிரியர் வேல்முருகன், 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்வதற்கான நடைமுறைகள், அதற்கான படிவங்கள் பூர்த்தி செய்யும் முறைகள் குறித்தும், ஓட்டு போடுவதன் முக்கியத்துவம் குறித்தும் பேசினார்.நிகழ்ச்சியில், தேர்தலின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில், அட்டை படங்கள் வைத்து பல்வேறு விளையாட்டுக்கள் மூலமாக மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X