பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்பது மாதமாக பணியிடங்கள் காலி

Added : நவ 28, 2019
Share
Advertisement
சூலுார் : சூலுார் ஊராட்சி ஒன்றியத்தில், 17 ஊராட்சிகள் உள்ளன. ஒன்றிய அலுவலகத்தில், இரு பி.டி.ஓ.,க்கள், துணை பி.டி.ஓ.,க்கள், இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் என, 25க்கும் மேற்பட்டவர் பணியாற்றி வந்தனர். கடந்த ஒன்பது மாதங்களாக ஒன்பது பணியிடங்கள் காலியாக உள்ளன.கிராம ஊராட்சிகளின் பி.டி.ஓ., நாகராஜன், கடந்த வாரத்தில், கோவை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறைக்கு மாற்றப்பட்டார்.

சூலுார் : சூலுார் ஊராட்சி ஒன்றியத்தில், 17 ஊராட்சிகள் உள்ளன. ஒன்றிய அலுவலகத்தில், இரு பி.டி.ஓ.,க்கள், துணை பி.டி.ஓ.,க்கள், இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் என, 25க்கும் மேற்பட்டவர் பணியாற்றி வந்தனர்.

கடந்த ஒன்பது மாதங்களாக ஒன்பது பணியிடங்கள் காலியாக உள்ளன.கிராம ஊராட்சிகளின் பி.டி.ஓ., நாகராஜன், கடந்த வாரத்தில், கோவை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறைக்கு மாற்றப்பட்டார். அப்பொறுப்புக்கு அத்துறையில் இருந்த சுப்புலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர், இதுவரை சூலுாரில் பொறுப்பேற்கவில்லை. உடல் நலம் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் இரு அலுவலர்கள் பல மாதங்களாக மருத்துவ விடுப்பில் உள்ளனர்.ஒரு மேலாளர், கணக்கர், இரு அலுவலக உதவியாளர் என, நான்கு பேர் மட்டும் பணியில் உள்ளனர்.

மொத்தம், ஒன்பது பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலும், தினசரி நடக்கும் அலுவல்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை அனுப்புதல், மேல் நடவடிக்கை தொடர்பான கடிதம் அனுப்புதல், பயனாளிகளின் குறைகளை களைவதிலும், களப்பணிகளை மேற்கொள்வதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருக்கும் சொற்பமான அலுவலர்களும் கலெக்டர் அலுவலக மீட்டிங், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் என, சென்று விடுவதால், கோப்புகள் தேங்கி கிடக்கின்றன.

மக்கள் கூறுகையில், 'அலுவலர் பற்றாக்குறையால், பல நுாறு விண்ணப்பங்கள் குவிந்து கிடக்கின்றன. மாவட்ட நிர்வாகம் உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X