சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோத்தகிரியில் வீட்டில் திடீர் தீ விபத்து

Added : நவ 28, 2019
Advertisement

கோத்தகிரி : கோத்தகிரியில் வீட்டில் திடீரென தீப்பிடித்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோத்தகிரி கைத்தளா பகுதியை சேர்ந்தவர் சரத்குமார். கூலித்தொழிலாளியான இவரும் இவரது மனைவியும் வீட்டை பூட்டி விட்டு, வேலைக்கு சென்றுள்ளனர்.இந்நிலையில், மாலை வந்த போது, வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. அருகில் இருந்தவர்கள், தீயை அணைக்க முயற்சித்து முடியாததால், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கோத்தகிரி தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று அணைத்தனர். இருப்பினும், வீட்டில் இருந்த கட்டில், மெத்தை உள்ளிட்ட உடமைகள் தீயில் எரிந்து, கருகி சேதமடைந்தன.தீ விபத்து குறித்து, கோத்தகிரி கைத்தளா பகுதியில் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X