சிறுமுகையில் பரிசல் இயக்க வேண்டும்டெண்டர் விட விவசாயிகள் கோரிக்கை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமுகையில் பரிசல் இயக்க வேண்டும்டெண்டர் விட விவசாயிகள் கோரிக்கை

Added : நவ 28, 2019
 சிறுமுகையில் பரிசல் இயக்க வேண்டும்டெண்டர் விட விவசாயிகள் கோரிக்கை

மேட்டுப்பாளையம் : விவசாயிகள் விவசாய விளை பொருட்களையும், மக்கள் தங்கள் வாகனங்களையும் பரிசலில் கொண்டு செல்ல, டெண்டர் விட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பவானி சாகர் அணை யின் நீர் மட்டம், 105 அடி யாக இருப்பதால், சிறுமு கையை அடுத்த ஆலாங் கொம்பு வரை பவானி ஆற்றில், தண்ணீர் தேங்கி யுள்ளது.கோத்தகிரி மலையிலிருந்து வரும் தண்ணீர், காந்தையாற்றின் வழியாக பவானி ஆற்றில் சேர்கிறது. காந்தையாறு, பவானி ஆற்றின் கிளை ஆறு என்பதால், காந்தையாற்றின் குறுக்கே கட்டிய உயர் மட்டப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது.இதனால், காந்தவயல், காந்தையூர், மொக்கைமேடு, உளியூர் ஆகிய பழங்குடியின மக்களும், லிங்காபுரம், சிறுமுகை ஆகிய பகுதி விவசாயிகளும் பரிசல்கள் மூலம் ஆற்றை கடந்து வந்தனர்.

கோவை மாவட்ட நிர்வாகம், மோட்டாரில் இயங்கும் போட்டை கொடுத்து, பள்ளி குழந்தைகள், பொதுமக்களை இலவசமாக ஏற்றி வரச் செய்துள்ளது. ஆனால், பொது மக்களின் வாகனங்களையும், விவசாய விளை பொருட்களையும் கொண்டுவர வழி இல்லை.இதற்காக சிலர், சிறிய பரிசல்களை இயக்குகின்றனர். இந்நிலையில், இரு விவசாயிகள் பிளாஸ்டிக் டிரம்களை கொண்டு, மோட்டார் மூலம் இயங்கும்படி, பெரிய 'போட்' தயாரித்துள்ளனர். அதில், பொதுமக்களின் வாகனங்கள், விவசாய விளை பொருட்களை ஏற்றிவர ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த பெரிய ேபாட் பாதுகாப்பாக இருக்குமா என்பது கேள்விக்குறி.மேலும், பெரிய போட் வைத்துள்ளவர்களுக்கும், சிறிய பரிசல் வைத்துள்ளவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால், பேரூராட்சி நிர்வாகம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், காந்தையாற்றில் பரிசல்களை இயக்க டெண்டர் விட்டது போல், இப்போதும் டெண்டர் விட ஏற்பாடு செய்ய வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X