சாலையில் கட்டுமானப் பொருள் பயணிகளுக்கு இடையூறு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலையில் கட்டுமானப் பொருள் பயணிகளுக்கு இடையூறு

Added : நவ 28, 2019

கோத்தகிரி : கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு செல்லும் சாலையில், கட்டுமான பொருட்கள் கொட்டப்பட்டுள்ளதால், இடையூறு ஏற்பட்டுள்ளது.

கோத்தகிரி ராமசந்த் கால்டெக்ஸ் பகுதியில் இருந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு செல்லும் பிரதான சாலையில் அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. பள்ளி மாணவ,மாணவியர் உட்பட, பொதுமக்கள் இச்சாலையை பயன்படுத்துகின்றனர். இச்சாலையில், மக்கள் நடந்து செல்ல ஏதுவாக, நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவர் பூங்காவில் குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பணிகள் துவங்கியது.பொது மக்களின் எதிர்ப்புக்கு இடையே, பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இப்பணிக்காக, நடைபாதை மற்றும் சாலையில் கட்டுமானப் பொருட்கள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட மக்கள் நடந்து செல்ல சிக்கல் ஏற்பட்டுள்ளது மேலும், முறையாக 'பார்க்கிங்' செய்ய முடியாத நிலையில், பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.எனவே, இடையூறாக கொட்டி வைக்கப்பட்டுள்ள கட்டுமான பொருட்களை அப்புறப்படுத்துவது அவசியம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X