பொது செய்தி

தமிழ்நாடு

மின்வாரியத்தில் கேங்மென் பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு டிச., 2ல் துவக்கம்

Added : நவ 28, 2019
Advertisement

கோவை : கோவை வடக்கு மற்றும் தெற்கு மின் பகிர்மான வட்டங்களின் 'கேங்மென்' பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, டிச.,2ம் முதல் 12 வரை நடக்கிறது.

இது குறித்து கோவை மண்டல மின் பகிர்மான தலைமை பொறியாளர் பொறுப்பு கலைச்செல்வி அறிக்கை:கோவை வடக்கு மற்றும் தெற்கு மின் பகிர்மான வட்டங்களில் 'கேங்மென்' பதவிக்கான, 2,104 நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித்தேர்வு, டாடாபாத்திலுள்ள மேற்கு பவர் ஹவுஸில் உள்ள தலைமை பொறியாளர் அலுவலக வளாகத்தில், டிச., 2 முதல் 12 வரை காலை 8:00 முதல் மாலை 6:00 மணி வரை நடக்கிறது.இப்பதவிக்கு, இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தவர்கள், மின்னஞ்சல் வாயிலாக பெறப்பட்ட அனுமதி சீட்டு மற்றும் சரிபார்ப்பு பட்டியலின்படி, சரியான ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும்.

எனவே விண்ணப்பதாரர்கள், போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்கள், கடைசியாக படித்த கல்வி நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஜாதிச்சான்றிதழ், மாற்றுத்திறனாளி சான்றிதழ், பண்பு மற்றும் ஒழுக்கச்சான்று, வேலை வாய்ப்புபதிவு அட்டை, அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகலுடன், அசல் சான்றிதழ்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு,கொண்டுவர வேண்டும்.இவ்வாறு, தலைமைப்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X