சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சேரம்பாடி வனத்தில் இறந்த குட்டி யானை

Added : நவ 28, 2019
Advertisement
 சேரம்பாடி வனத்தில் இறந்த குட்டி யானை

பந்தலுார் : பந்தலுார் அருகே சேரம்பாடி வனச்சரகம், சேரம்பாடி அருகே நாயக்கன்சோலை வனப்பகுதியில், நேற்று முன்தினம் இரவு யானைகளின் பிளிறல் சப்தம் கேட்டுள்ளது.

நேற்று காலை, பொதுமக்கள் அப்பகுதியில் சென்று பார்த்தபோது, 7 யானைகள் கொண்ட கூட்டம் அங்கு இருந்தது.பின்னர், 6 யானைகள் வனத்தின் உட்பகுதிக்கு சென்ற நிலையில், இறந்து கிடந்த குட்டியின் அருகே தாய் யானை, நின்று பிளிறியதுடன், பொதுமக்களை கோபத்துடன் பார்த்தது. தகவலறிந்த, உதவி வனப்பாதுகாவலர் விஜயன், வனச்சரகர் கணேசன் தலைமையிலான வனத்துறையினர், யானை கண்காணிப்பு மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சென்று பார்த்தனர்.தொடர்ந்து, பட்டாசு வெடித்தும், சற்று தொலைவில் தீ மூட்டியும் யானையை விரட்ட முயற்சி மேற்கொண்டனர்.

ஆனால் யானை, இறந்த குட்டியை விட்டு அகல மறுத்தது. வனத்தின் உட்பகுதியில் குட்டி இறந்துள்ளதாலும், தாய் யானை பாசப்போராட்டம் நடத்தி வருவதாலும், இறந்த குட்டியானை குறித்த தகவல்கள் ஏதும் தெரியவில்லை. இந்த சம்பவம், அப்பகுதியில் வாழும் மக்களை கண்கலங்க வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X