சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தபால் அலுவலகத்தில் ரூ.4.50 லட்சம் மோசடி

Added : நவ 28, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
காரைக்குடி : காரைக்குடி, செஞ்கை கிளை தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கில் ரூ.4.50 லட்சம் மோசடி செய்ததாக கூறி வாடிக்கையாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.இங்குள்ள கிளை தபால் அலுவலகம் 25 ஆண்டாக இயங்குகிறது. தபால் நிலைய அலுவலராக மகேஷ்வரி உள்ளார். 200 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் சிறுசேமிப்பு, தொடர் வைப்பு கணக்கு மூலம் பணம் போட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக தபால்

காரைக்குடி : காரைக்குடி, செஞ்கை கிளை தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கில் ரூ.4.50 லட்சம் மோசடி செய்ததாக கூறி வாடிக்கையாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இங்குள்ள கிளை தபால் அலுவலகம் 25 ஆண்டாக இயங்குகிறது. தபால் நிலைய அலுவலராக மகேஷ்வரி உள்ளார். 200 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் சிறுசேமிப்பு, தொடர் வைப்பு கணக்கு மூலம் பணம் போட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக தபால் அதிகாரிகள், கணக்கு புத்தகத்தில் வரவு வைக்காமல், ஏமாற்றுவதாக, வாடிக்கையாளர்கள் தபால் நிலைய ஆய்வாளர் டென்னிசிடம் புகார் அளித்தனர்.

இது குறித்து விசாரணை நடத்திய ஆய்வாளர், வாடிக்கையாளர் கணக்கில் இருந்த ரூ.4.50 லட்சம் வரை மோசடி செய்ததை கண்டறிந்தார். இதையடுத்து, மகேஸ்வரியை சஸ்பெண்ட் செய்தனர். கட்டிய பணத்தை திரும்ப கேட்டு, நேற்று தபால் அலுவலகத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர். அனைவரது பணமும், கணக்கில் வரவு வைக்கப்படும் என உறுதி அளித்ததால், முற்றுகையை கைவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalairajan Krishnan - karaikudi,இந்தியா
28-நவ-201917:00:35 IST Report Abuse
Kalairajan Krishnan பணம் செலுத்துபவர்கள் நம்பிக்கையின் அடிப்படையில் பணம் செலுத்துகின்றனர். பணம் செலுத்தியவுடன் SMS செய்தி அனுப்புவதில்லை. அதனால்தான் இதுபோன்ற தவறுகள் நடக்கின்றன. தபால்துறை SMS செய்திகளை அனுப்பவேண்டும்.
Rate this:
Cancel
Chockalingam - Managiri - Karaikkudi,இந்தியா
28-நவ-201910:06:19 IST Report Abuse
Chockalingam அது மட்டுமல்ல. பல தபால் அலுவலகங்களில் பணம் செலுத்துவதற்கான form -ல் counterfoil- களே கிடையாது. கிழித்து தனியே எடுத்துவிடுகின்றனர் . மேலும். form- களில் கணக்கு எண், பெயர், தொகை போன்றவற்றை எழுதுவதற்கு போதிய இடம் கிடையாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X