பொது செய்தி

தமிழ்நாடு

கோவை சகோதயா தடகளம்

Added : நவ 28, 2019
Advertisement

கோவை : கோவை சகோதயா தடகள போட்டியில், பள்ளி மாணவ, மாணவிகள் தங்களின் முழு திறமையும் வெளிப்படுத்தி அசத்தினர்.

கோவை சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் நடத் தும், 3ம் ஆண்டு சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகள போட்டி, பாரதியார் பல்கலை மைதானத்தில் நேற்று நடந்தது. 38 பள்ளிகளிலிருந்து, 700க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.100மீ., 200மீ., 400மீ., 800மீ., 1,500மீ., நீளம்தாண்டுதல், உயரம்தாண்டுல், குண்டுஎறிதல், வட்டுஎறிதல், ஈட்டிஎறிதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.போட்டியை, கோவை மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷயன் துணைத்தலைவர் குருசாமி துவக்கி வைத்தார்.

கோவை சகோதயாவின் தலைவர் கிரிஷ், துணைத்தலைவர் மிராஸ்கரின், செயலாளர் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.மாணவர்கள் பிரிவு19 வயதுக்கு உட்பட்டோருக்கான 1,500மீ., போட்டியில், கோகுல், அஸ்வின், செல்வகணபதி; குண்டுஎறிதலில், சுதர்சன், ஸ்ரீவட்சன், கோகுல்; உயரம்தாண்டுதல் ராம்ஆகாஷ், அன்பு, நிர்மலேஸ்வரன்; 100மீ., சுஜித், நிதிஷ்வர், தனுஷ்; 17 வயதுக்கு உட்பட்ட 1,500மீ., போட்டியில் மகாசக்திகுமார், ஹரிஷ், சுகன்த்; வட்டுஎறிதலில், திரிலோக் விஜய், ராகவேந்திரா ராஜா, பேரரசு; 12 வயதுக்கு உட்பட்ட குண்டு எறிதலில் விஜய்குமார், பார்லேஸ், ஆதித்யா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

மாணவிகள் பிரிவு19 வயதுக்கு உட்பட்டோருக்கான 1,500மீ., போட்டியில் வேதசுர்தி, லேக்கா சுர்தி, கார்த்திகா; 100மீ., கீதா ரேவதி, ஸ்ரீசம்யுத்தா, சஞ்சன்யா; 17 வயதுக்கு உட்பட்ட 1,500மீ., போட்டியில் அர்மிதா, சோனிகா, தக் ஷன்யா; ஈட்டிஎறிதலில், பிரஜனா, ஸ்ரீசுர்திகா, ஹர்னி; 14 வயதுக்கு உட்பட்ட நீளம்தாண்டுதலில், தக் ஷிதா, ரக் ஷனா, அரந்தனா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.வெற்றி பெற்ற வீரர்களுக்கு, சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X