சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாவோயிஸ்ட்கள் சுட்டுகொலை கோர்ட்டில் ரூபேஷ் கோஷம்

Added : நவ 28, 2019
Share
Advertisement
கோவை : பாலக்காட்டில் நக்கல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து, கோவை கோர்ட்டில் ஆஜரான மாவோயிஸ்ட் ரூபேஷ் கோஷம் எழுப்பினார். கோவை அருகே கருமத்தம்பட்டியில், சதி திட்டத்தில் ஈடுபட்டதாக மாவோயிஸ்ட்கள், ரூபேஷ், 47, மனைவி ஷைனி,44, அனுாப்,35, கண்ணன்,48, வீரமணி,62,ஆகியோர், மே 2015ல்,தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டனர்.இவர்களில், ைஷனி ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

கோவை : பாலக்காட்டில் நக்கல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து, கோவை கோர்ட்டில் ஆஜரான மாவோயிஸ்ட் ரூபேஷ் கோஷம் எழுப்பினார்.

கோவை அருகே கருமத்தம்பட்டியில், சதி திட்டத்தில் ஈடுபட்டதாக மாவோயிஸ்ட்கள், ரூபேஷ், 47, மனைவி ஷைனி,44, அனுாப்,35, கண்ணன்,48, வீரமணி,62,ஆகியோர், மே 2015ல்,தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டனர்.இவர்களில், ைஷனி ஜாமினில் விடுவிக்கப்பட்டார். வழக்கிலிருந்து விடுவிக்க கோரி, ஐந்து பேரும், மாவட்ட செஷன்ஸ் தாக்கல் செய்த மனு மீது, விசாரணை நடந்து வருகிறது.இந்த நிலையில் காவல் நீட்டிப்புக்காக, கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரூபேசை நேற்று கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மற்றவர்கள் வீடியோகான்பரன்சில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அதை தொடர்ந்து டிச.,11 வரை, காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது.கேரள மாநிலம் பாலக்காட்டில், நச்சல்கள் சுட்டு கொல்லப்பட்டதற்கு எதிராக ரூபேஷ் கோஷம் எழுப்பினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X