பூங்கா புல்தரை மைதானம் மண் கொட்டி பராமரிப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பூங்கா புல்தரை மைதானம் மண் கொட்டி பராமரிப்பு

Added : நவ 28, 2019
Share
ஊட்டி : தாவரவியல் பூங்கா புல்தரை மைதானத்தில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது.தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வகையில், பல்வேறு வகையான மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. பூங்காவில் உள்ள பிரதான புல் மைதானத்தில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் கூடி விளையாடி மகிழ்கின்றனர். நடந்து முடிந்த கோடை சீசனில் மற்றும் இரண்டாவது சீசனில் பல லட்சம் சுற்றுலா

ஊட்டி : தாவரவியல் பூங்கா புல்தரை மைதானத்தில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது.தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வகையில், பல்வேறு வகையான மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. பூங்காவில் உள்ள பிரதான புல் மைதானத்தில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் கூடி விளையாடி மகிழ்கின்றனர்.
நடந்து முடிந்த கோடை சீசனில் மற்றும் இரண்டாவது சீசனில் பல லட்சம் சுற்றுலா பயணிகள் மைதானத்தை பயன்படுத்தியதால் புல்தரை மைதானத்தில் ஆங்காங்கே பாதிக்கப்பட்டுள்ளது.தண்ணீர் பாய்ச்சி சீரமைத்த போதும், சில பகுதிகளில் புற்கள் வளரவில்லை. இதையடுத்து பூங்கா நிர்வாகம், பிற பகுதிகள் உள்ள, புற்களை வெட்டி வந்து, புல்தரை மைதானத்தில் பதித்து, மண் கொட்டி சமன்படுத்தி உரமிட்டு பராமரித்து வருகின்றனர்.இணை இயக்குனர் சிவசுப்ரமணி சாம்ராஜ் கூறுகையில், ''அடுத்தாண்டு கோடை சீசனுக்காகபூங்காவில் உள்ள பிரதான புல்தரை மைதானம் மண் கொட்டி உரமிட்டு பராமரிக்கப்படுவதுடன், இதர பராமரிப்பு பணிகளும் நடந்து வருகிறது,''என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X