சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிலிண்டரை வெடிக்க செய்வேன்

Added : நவ 28, 2019
Advertisement

காரைக்குடி : -காரைக்குடி சுப்பிரமணியபுரம் 10 வது வீதியை சேர்ந்தவர் ராதா 55. இவர் தனியார் பள்ளியில் வேலை செய்து, குழந்தைகளை வளர்த்தார். இவருக்கு 1 மகள், 2 மகன்கள். இவரது கடைசி மகன் இன்ஜி., பட்டம் முடித்தவர் சண்முகநாதன் 24. தன் தாயிடம் அடிக்கடி பணம் கேட்டுள்ளார். அவர் தராததால், நேற்று காலை சண்முகநாதன், தனது பாட்டி பேச்சுமுத்துவுடன் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டியுள்ளார்.

வெளியில் இருந்த தாய் ராதாவிடம், ரூ.3.20 லட்சம் தந்தால் தான், வீட்டை விட்டு வெளியே வருவேன். இல்லாவிடில் வீட்டில் உள்ள சிலிண்டரை வெடிக்க செய்து, இறந்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதில் அச்சமடைந்த ராதா, காரைக்குடி வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் 2 மணி நேரமாக போராடி, கதவை உடைத்து சண்முகநாதனை மீட்டனர்.

இது குறித்து தாய் ராதா கூறியதாவது: கடந்த 20 நாட்களாக வீட்டில் சாப்பிடாமல், மனநிலை பாதித்தவர்போல் இருந்தான். சாப்பிடுமாறு திட்டும் போதெல்லாம், அதற்கு அபராத தொகை நிர்ணயித்து கணக்கு வைத்துவந்தான். அந்த வகையில் ரூ.3.20லட்சம் கேட்டு மிரட்டினார், என்றார். போலீசார் அவரை மீட்டு மனநல டாக்டரின் ஆலோசனைக்காக மருத்துவமனை அழைத்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X