பொது செய்தி

தமிழ்நாடு

தினமலர் செய்தி எதிரொலி வடிகால்கள்  சீரமைப்பு  

Added : நவ 28, 2019
Advertisement

ராமநாதபுரம் : ராமநாதபுரம் குமரய்யா கோயில் பகுதியில் மழை நீர் வடிகால்களில் இடிந்து விழுந்த கட்டுமானம், துார்ந்துபோனவடிகால்களால் மழை நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்ற செய்தி தினமலர் நாளிதழில் வெளியிடப்பட்டது. தற்போது நகராட்சி நிர்வாகம் துார்ந்து போன கால்வாய்களை சீரமைக்கும் பணியினை தீவிரப்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் நகராட்சிப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டதால், கழிவு நீர் கால்வாய்கள் அனைத்தும் துார்ந்து போனது. பருவமழை காலங்களில் மழை நீர் வடியாமல் பல பகுதிகளில் தேங்கியுள்ளது.இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த செய்தி சில தினங்களுக்கு முன் தினமலர் நாளிதழில் படத்துடன் வெளியிடப்பட்டது. நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் மூலம் கால்வாய்கள் துார் வாரும் பணிகள்நடந்து வருகிறது.இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது போல் நகரில் முக்கியவீதிகளில் துார்ந்து போன கால்வாய்களை நகராட்சி நிர்வாகம் துார் வாரி மழை நீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X