பொது செய்தி

தமிழ்நாடு

சந்தேகங்களை தீர்க்கும் 'சக்சஸ் மந்த்ரா!'

Added : நவ 28, 2019
Advertisement

கூடலுார் : நீங்கள் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவரா; வாழ்வில் வெற்றிபெறும் உத்வேகம் கொண்டவரா; பொதுத்தேர்வில் வென்று, உயர்கல்வி வாய்ப்புகளை வெல்லும் துடிப்பு மிக்கவரா; அப்படியானால், உங்களுக்காகத்தான் இந்த நிகழ்ச்சி.

கூடலுாரில், 'தினமலர்' நாளிதழ் சார்பில், 30ம் தேதி நடக்கும் 'சக்சஸ் மந்த்ரா' நிகழ்ச்சியில் நீங்கள் பங்கேற்றால், புதிய பாடங்கள் குறித்த சந்தேகங்களை தெளிவுபடுத்தி, அதிக மதிப்பெண்களை பெறலாம்.மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் எப்போதும் அக்கறை மிகுந்த, 'தினமலர்' நாளிதழ், 'ஜெயித்துக்காட்டுவோம்', 'வழிகாட்டி', 'உங்களால் முடியும்', 'வினாடி வினா' உள்ளிட்ட நிகழ்ச்சிகளை, பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது.அந்த வரிசையில், தற்போது, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்கள் புதிய பாடத்திட்டங்களில் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களுக்கு தீர்வு வழங்கும், 'சக்சஸ் மந்த்ரா' (ஜெயித்துக்காட்டுவோம், 2.0) நிகழ்ச்சியை நடத்துகிறது.

கூடலுார், கோழிக்கோடு மெயின் ரோட்டில் உள்ள நர்த்தகி ஆடிட்டோரியத்தில், வரும் 30ம் தேதி, காலை, 10:00 முதல், மதியம், 1:00 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சியை 'தினமலர்' நாளிதழுடன், அமிர்தா விஸ்வ வித்யா பீடமும் இணைந்து வழங்குகிறது.புதிய பாடத்திட்டங்களில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை தீர்க்கவும், பொதுத் தேர்வை பயமின்றி எழுதவும், ஆலோசனைகள் வழங்கும் இந்நிகழ்ச்சியில், பாடத்திட்ட தயாரிப்பு குழு வல்லுனர்கள், மிகச்சிறந்த கல்வியாளர்கள், பிரபல தன்னம்பிக்கை பேச்சாளர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.

பொதுத்தேர்வு நடக்கும் விதம், புதிய பாடங்களை மாணவர்கள் அணுகும் முறை, நுழைவுத்தேர்வு, போட்டித் தேர்வுகளுக்கு தயாராவது, உயர்கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தி சாதனை படைப்பது குறித்தும், நிகழ்ச்சியில் விளக்கம் அளிக்கப்படுகிறது.பாடங்களை, மனப்பாடம் செய்யாமல் புரிந்து படிப்பது, புதிய சிந்தனைகள் வளர்க்கும் விதம், சுய ஆற்றல், ஆழ்ந்த கற்றலின் வலிமை, தேர்வுக்கு முன் உடல் நலம், மனநலம் பேணுவது, கற்றலை எளிதாகவும், தேர்வை இனிதாகவும் மாற்றுவது, கற்றதை தேர்வில் சிறப்பாக வெளிப்படுத்துவது, அதிக மதிப்பெண் பெற வழிகள் உள்ளிட்ட தலைப்புகளில், நிபுணர்கள் பயனுள்ள தகவல்களை வழங்குகின்றனர்.

நிகழ்ச்சியில், முக்கிய குறிப்புகள் மற்றும், வினாக்கள் உள்ளடங்கிய புத்தகம் இலவசமாக வழங்கப்படும். மாணவர்களுடன், பெற்றோரும் பங்கேற்கலாம். அனைவருக்கும் அனுமதி இலவசம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X