கமுதி : கமுதி அருகே பள்ளி எதிரே தனியார் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தபட்டிருப்பதால், மாணவர்கள் பள்ளி வாகனங்களிலும், சைக்கிள்களிலும் செல்ல முடியாமல், விபத்து அபாயத்தில் தவித்து வருகின்றனர்.
கமுதியிலிருந்து தெற்கு முதுகுளத்துார் செல்லும் ரோட்டில், 1,600 மாணவர்கள் மாணவர்கள் படிக்கும் தனியார் பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு செல்லும் வழியில் ரோட்டோரங்களில் சரக்கு வாகனங்கள், வாடகை வாகனங்களை நிறுத்தி, ஆக்கிரமித்துள்ளதால், பள்ளி வாகனங்களை இயக்க முடியாமலும், சைக்கிள்களில் பள்ளிக்கு செல்ல முடியாமல், வாகன விபத்து அச்சத்தில் உள்ளனர். பள்ளி அருகே உள்ள கடைகள், வீடுகளிலிருந்து வெளியேற்றபடும் குப்பைகள் பள்ளி நுழைவு வாயில் முன் சேமிக்கப்படுவதால், மாணவர்கள் துர்நாற்றத்தின் பிடியில் சிக்கியுள்ளனர். பள்ளி செல்லும் வழியில் ரோட்டோரங்களை ஆக்கிரமித்து நிறுத்தபட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்தியும், குப்பைகளை பள்ளி முன் சேமிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.