சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இழப்பை சந்திக்கும் தோட்ட நிறுவனங்கள்

Added : நவ 28, 2019
Advertisement

குன்னுார் : 'பெருந்தோட்டங்களின் நிலையை கருத்தில் கொண்டு, வாரியங்களுக்கு மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்,' என 'உபாசி' வலியுறுத்தியுள்ளது.

குன்னுாரில் உள்ள தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்க (உபாசி) தலைவர் நாகப்பன் வெளியிட்ட அறிக்கை:காலநிலை மாற்றம், அதிக விவசாய பாதிப்புகளை எதிர்கொள்வதால், தேயிலை உள்ளிட்ட தோட்ட பயிர்களுக்கு, உரிய விலை கிடைக்காமல், தோட்ட நிறுவனத்தினர், மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்கவும் சிரமப்படுகின்றனர்.எதிர்காலத்தில், விலை உயர்வதற்கான வாய்ப்புகள் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அரசு உடனடியாக தலையிட்டு, தீர்வு காண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

உற்பத்தியாளர்களுக்கு, வாரியங்களால் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களுக்கான தொகை நிலுவையில் உள்ளது. தேயிலைக்கு மட்டும், 55 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. வாரியங்களுக்கான ஒதுக்கீடு ஆண்டுதோறும் குறைக்கப்படுகிறது.தற்போதைய பட்ஜெட்டில், வாரியங்களுக்கு வழங்கும் மிக குறைந்த நிலுவை தொகை போதுமானதாக இருக்காது. பெருந்தோட்டங்களின் நிலையை கருத்தில் கொண்டு, வாரியங்களுக்கு மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதனால், தென்னிந்திய உற்பத்தியாளர்களுக்கு தற்போது நிலவும் நிதி நெருக்கடி ஓரளவு நிவர்த்தியாக வாய்ப்பாக அமையும். இவ்வாறு நாகப்பன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X