மணக்குடியில் மூடப்படாத ஆழ்துளை கிணறு

Added : நவ 28, 2019
Share
Advertisement
அனுமந்தக்குடி : தேவகோட்டை தாலுகா அனுமந்தக்குடி ஊராட்சியைச் சேர்ந்தது மணக்குடி கிராமம். 175 குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் குடிநீருக்கான வசதி இருந்தும் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.வீடுகளுக்கு நடுவே உள்ள மேல்நிலை தொட்டி 20 ஆண்டுகளாக பழுதடைந்து உள்ளது. இந்த தொட்டி எந்த நேரத்திலும் விழும் அபாயம் உள்ளது.தொட்டியை ஒட்டி குடியிருப்போர்

அனுமந்தக்குடி : தேவகோட்டை தாலுகா அனுமந்தக்குடி ஊராட்சியைச் சேர்ந்தது மணக்குடி கிராமம். 175 குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் குடிநீருக்கான வசதி இருந்தும் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

வீடுகளுக்கு நடுவே உள்ள மேல்நிலை தொட்டி 20 ஆண்டுகளாக பழுதடைந்து உள்ளது. இந்த தொட்டி எந்த நேரத்திலும் விழும் அபாயம் உள்ளது.தொட்டியை ஒட்டி குடியிருப்போர் அச்சத்துடன் வசிக்கின்றனர். மேல்நிலைத்தொட்டி ஆபத்தான நிலையில் இருப்பதால் ரோட்டை ஒட்டி பல ஆண்டுகளுக்கு முன் நீரோட்டம் பார்த்து பெரிய ராட்சத ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டுள்ளது. நல்ல தண்ணீர் இருந்தும் தற்போது பயனற்று உள்ளது. சாதாரணமாக ஆழ்துளை கிணறு 4 இஞ்ச், 6 இஞ்ச் என்று குழாய் பதிப்பார்கள். ஆனால் இந்த குடிநீர் குழாய் 10 இஞ்ச் சுற்றளவில் போடப்பட்டுள்ளது. எளிதாக குழந்தைகள் விழும் நிலை உள்ளது.செபஸ்டியான் கூறுகையில், மேல்நிலைத் தொட்டியை இடித்து விடுவதாக அதிகாரிகள் கூறி சென்றும் நடவடிக்கை இல்லை.ஆழ்துளை கிணறை பொறுத்தவரை நல்ல குடிநீர். ஓராண்டிற்கு முன் மின் கட்டண பாக்கி இருப்பதாகவும் மின்கட்டணத்தை கட்டிவிட்டால் மீண்டும் இணைப்பு கொடுக்கப்பட்டு குடிநீர் வசதி கிடைக்கும் என்றார்கள். பல கிராமங்களுக்கும் இந்த குடிநீர் வழங்கி வந்த இந்த ஆழ்துளை கிணற்றை பயன்படுத்த வேண்டும், இல்லையேல் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X